வரலாற்று புகழ்மிக்க குமாரபுரம் ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயம்

வரலாற்று புகழ்மிக்க குமாரபுரம் ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயம்

Menu

எம்மைப்பற்றி

வரலாற்று புகழ்மிக்க குமாரபுரம்

குறிஞ்சிக் கிழவனாகிய குமரவேள் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் தொல் பதிகள் ஈழவள நாட்டிற் பலவுள.

அவற்றுள்ளே தெற்கில் கதிர்காமமும் வடக்கில் மாவிட்டபுரம், நல்லூர், கந்தவனம் என்பனவும் விசேட தொன்மை வாய்ந்தவை.

இவையேயன்றி வடஇலங்கையின் கீழ் பாகத்தில் வன்னி நாட்டில் விளங்கும் குமாரபுரமும் தொன்மையும் சரித்திரப் பிரசித்தியும் வாய்ந்ததொன்றாகும்.

ஈழவள நாட்டின் வடபாகத்தைப் பன்னெடுங் காலமாகத் தமிழ்மன்னர் ஆட்சிசெய்து வந்துள்ளனர். முன்னர் காடாகியிருந்து நாடாக்கப் பெற்றுவரும் வன்னிப்பகுதி பண்டு செந்நெற் களனிகளாகவும் நாகரீகமிக்க சைவத் தமிழ் மக்கள் வாழ்ந்த நிலமாகவும் விளங்கிற்று.

வன்னியர்க ளெனப்படும் குறுநில மன்னர்கள் சுதந்திரமாக இப்பகுதியை ஆண்டுவந்துள்ளனர்.

யாழ்ப்பாண அரசுக்கும் அந்நிய அரசுக்கும் அடிபணியாத காரணத்தால் வன்னி நாட்டுக்கு “அடங்காப்பற்று” என்னுமொரு காரணப் பெயருமுண்டு.

குமாரபுரம் சித்ரவேலாயுதர் ஆலயத்தின் முன்புறத் தோற்றம்அம்மன்னர்களாட்சியில் இருந்த புராதன ஆலயங்களுள் குமாரபுரம், வற்றாப்பழை, புதுவூர், உருத்திரபுரம் பழமையானவை.

தனியூற்றின் கீழ்ப்பாலமைந்த குமாரபுரப் பகுதி அக்காலத்துத் “தண்ணீர் முறிப்பு” என வழங்கப்படினும் முற்காலத்துப் பெரிய “குருந்தனூர்க்குளம்” என்றபெயரால் வழங்கப் பெற்றதென அறியக்கிடக்கின்றது.

இடிக்கப்பட்ட இக் கோவிலிலுள்ள செங்கற்களிலே தெய்வ உருவங்கள் பல செதுக்கப் பட்டிருந்தன.

இந்த ஆலயத்தில் கந்தஷஷ்டி விழா மிகவும் சிறப்பானதாகும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த ஆலயத்திலேயே முதன் முதலில் சூரன்போர் நிகழ்வு நடந்ததென்பர்.


குமாரபுரம் ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயம்